நெல்லையில் நடந்த ஆணழகன் போட்டி; தென் மாவட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு..

நெல்லையில் தென் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் நடந்தது. இந்தியன் பிட்னஸ் பெடரேஷன், திசையன்விளை ரோட்டரி கிளப் எலைட், ஜி.எம். ஜிம் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய போட்டியை கோவில் நிர்வாகி சேம்பர் கே. செல்வராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திசையன்விளை ரோட்டரி கிளப் எலைட் தலைவர் டி. சாந்தகுமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வள்ளியூர் போலிஸ் டி.எஸ்.பி. சமய் சிங்மீனா கலந்து கொண்டார். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி,மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். உடல் எடைக்கு தகுந்தவாறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் உடல் அழகை காட்டினர்.இதில் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் ஒட்டுமொத்த சேம்பியனாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு முதல் பரிசாக விருதுநகர் தொழில் அதிபர்கள் காசிராஜ்,கதிர்வேல் சார்பில் ரூபாய் 55ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை முன்னாள் யூனியன் சேர்மன் வி. எஸ். ஆர். ஜெகதீஷ் வழங்கினார். வழக்கறிஞர் பழனிசங்கர், தொழிலதிபர் தங்கையா கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியின் போட்டியாளர்களை இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் நிறுவன தலைவர் ஜெகந்நாதன் மற்றும் நிர்வாகிகள் தனசேகரன், ஆல்பர்ட் பிரேம்குமார் ஆகியோர் தேர்வு செய்தனர். திசையன்விளை ரோட்டரி கிளப் எலைட் தலைவர் டி. சாந்தகுமார் ,ஜி.எம்.ஜிம் கிளப் சிவகுரு ஆகியோர் ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள். நிகழ்ச்சியில் பி.டி.பி. பொன்ராஜ், முத்துவேல் ஐயப்பன், ஜி.கேசவன், சகாதேவன், ஜே.எல்.ஆர்.தினேஷ் , ஜி.மணிகண்டன் மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். திசையன்விளை ரோட்டரி கிளப் எலைட் நிர்வாகிகள் ஐ.ஆர்.ரமேஷ், கே.டி.பி.பிரபாகர் ,ரமேஷ் குமார் ,பெருமாள் ராஜ் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் அனைத்து பிரிவுகளுக்கும் பரிசு கோப்பைகளை வழங்கினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!