தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்;திமுக மாவட்ட செயலாளர் துவக்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம் சுரண்டை அருகே உள்ள சோலைசேரி பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் நெட்டூர் வட்டாரம் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சோலைச்சேரி டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா மருத்துவ முகாமின் நோக்கம் தமிழக அரசு வழங்கும் மருத்துவ சேவைகள், மற்றும் வசதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், குறித்து பேசி அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுடன் தனிமனித இடைவெளி, முககவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடித்தல் குறித்து பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர், மற்றும் குழந்தைகள் நலன், கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் எலும்பு முறிவு, தோல், பல், சித்தா, இதயம், உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டன. ஸ்கேன், இஜிஜி, இரத்த பரிசோதனை, செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவார் குத்தாலராஜ், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் தர்மலிங்கம், தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் உதவி திட்ட மேலாளர் டாக்டர் கீர்த்திகா, மாவட்ட நல கல்வியாளர் ஆறுமுகம், வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் கங்காதரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜநயினார், கணேசன், லிங்கசாமி, ராம்குமார், ஜெயகுளோரி ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆகியோர் கலந்து கொண்டனர் முகாமினை நெட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!