பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க “Women Help Desk” புதிய திட்டம் துவக்கம்; உதவும் பணியில் தென்காசி மாவட்ட காவல்துறை..

தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS “Women Help Desk” திட்டத்தை 08.07.21 வியாழக் கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்களான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெண்ணை மானபங்கம் படுத்தல் போன்ற குற்றங்கள், குழந்தை திருமணம், குழந்தைகளை தாக்குதல், பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தல் போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க “Women Help Desk” என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1098 மற்றும் 181 என்ற உதவி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு தொடர்பு கொள்ள முடியும்.இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடப்பதாக புகார் பெறபட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து அதற்காக நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக செய்து கொடுக்கும் விதமாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது* இதற்காக தென்காசி மாவட்டத்தில் 40 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு புதிதாக 20 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜீ, சைபர் கிரைம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், காவல் ஆளிநர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!