நெல்லையில் தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி; சபாநாயகர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு..

நெல்லையில் தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கும் உதவும் வகையில் ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்வில் சபாநாயகர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் தமுமுக மற்றும் மமகவினரால் இரத்த தானம், மருத்துவ சேவை, அவசர ஆம்புலன்ஸ், கொரோனா கால மருத்துவ சேவைகள், கொரோனா துயர் துடைப்பு பணிகள், கொரோனாவால் இறந்தவர்களை சாதி மதம் கடந்து நல்லடக்கம் செய்யும் பணிகள் அனைத்தும் அரசுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் தமுமுக சார்பில் 169-வது ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் அண்ணாவி அன்வர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு MLA,தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியர் M H ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச் செயலாளர் ஹாஜா கனி,தமுமுக மாநில துணைத்தலைவர் P S ஹமீது, மாநில செயலாளர் S.மைதின் சேட் கான்,நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம்,மாநில செயலாளர் ஜோசப் நொலஸ்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட தலைவர் K S ரசூல் மைதின் , மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கிதர் மைதின்,மாநில தலைமை கழக பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ,மமக மாவட்ட செயலாளர் டவுண் ஜமால் ,மாவட்ட துணை செயலாளர் ஜாவீத்,தென்காசி மாவட்ட தலைவர் யாகூப்,மருத்துவ அணி செயலாளர் யூசுப், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏர்வாடி பேரூர் கிளை நிர்வாகிகள் AC பீர்,அப்துல் காதர்,சலாவூதீன் மற்றும் தமுமுக மமக தொண்டர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!