கடையநல்லூரில் சர்வதேச யோகா தினம்;சிறப்பு ஆசனங்கள் செய்து பள்ளி தாளாளர் அசத்தல்..

சர்வதேச அளவில் 7-வது யோகா யோகா தினம் இன்று உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இம்முறை சிறப்பு யோகா நிகழ்வுகளை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கொரோனாவை தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி தீபம் மூலம் யோகாசனம் நடந்தது. இதனை முன்னிட்டு கடையநல்லூரில் இன்டர் நேஷணல் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் முன்னாள் தலைவருமான முகம்மது ஹபீபு நேற்று தனது கை, கால், தலை யில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி கொரோனாவை தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும்சிறப்பு யோகாசனங்களை செய்து காண்பித்து அசத்தினார். மேலும் ஏற்கனவே 3.30 மணி நேரம் தொடர் உடற்பயிற்சி உலக சாதனையும், புஜங்காசனம் மூலம்இரண்டாவதாக உலக சாதனையும், மத்திய அரசின் நேரு யுவகேந்திரா மூலம் துர்னோச்சாரியார் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!