ராகுல், காமராஜர் பிறந்த‌ தினம் நிவாரண நாளாக கொண்டாடப்பட வேண்டும்; சுரண்டை நகர காங்கிரஸ் தீர்மானம்..

ராகுல்காந்தி, காமராஜர் பிறந்த‌ தினத்தை நிவாரண நாளாக கொண்டாட வேண்டும் என சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நகர காங்கிரஸ் கட்சி ஊழியர் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமை வகித்தார் ‌நகர பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட துணை தலைவர் பால் (எ) சண்முகவேல், மாவட்ட செயலாளர் சேர்மசெல்வம், சமுத்திரம், ராமராஜ், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மகாராஜா வரவேற்று பேசினார். தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் சந்தோஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி எம்எல்ஏவுமான பழனி நாடார் சிறப்புரை நிகழ்த்தினார். மகாராஜா, தினகரன், டயர் செல்வம், ஊடக பிரிவு சிங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வன், மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் ரத்தின சபாபதி, ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் தென்காசி தொகுதியில் பழனி நாடார் போட்டியிட வாய்ப்பளித்த சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழக தலைவர் அழகிரி, மற்றும் தலைவர்கள், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும், வெற்றிபெற உழைத்த கட்சியினர், கூட்டணி கட்சியினர், வாக்களித்த வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, தலைவர் ராகுல்காந்தி, காமராஜர் ஆகியோர் பிறந்த தினத்தை கொரோனா நிவாரண நாளாக சிறப்பாக கொண்டாட வேண்டும், சுரண்டையில் அரசு மருத்துவமனை, நகராட்சியாக தரம் உயர்த்துதல், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இலக்கிய அணி கந்தையா, காந்தி, ஜெயசந்திரன், அருணாசலம், சங்கர், சந்திரன், சேர்மன் அருணாசலம், கோபால், பிரபு, விஜயன், ஆட்டோ செல்வராஜ், பரமசிவன், வைரமுத்து, சுக்கிரன், மாரியப்பன், வவக்கீல் ரமேஷ், சாலமோன், சாமுவேல், சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெகன் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!