குற்றாலத்தில் தேரடி பகுதியில் இருந்த விநாயகர் சிலையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றால நாதர் சுவாமி கோவிலைச் சார்ந்த விநாயகர் கோவில் குற்றாலம் தேரடி வீதியில் சிற்றருவி செல்லும் வழியில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி இன்று காலை வழக்கம் போல பூஜை செய்ய கோவிலை திறந்துள்ளார். அப்போது கோவிலுக்குள் இருந்த விநாயகர் சிலையை காணவில்லை. இதனால் பூசாரி அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த குற்றாலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவம் நடைபெற்ற கோவிலை பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றாலத்தில் விநாயகர் சிலை மாயமான கோவிலின் கதவு இன்று காலையிலும் பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குற்றாலத்தில் விநாயகர் சிலை மாயமானது என்ற தகவல் அறிந்த குற்றாலம் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அந்த கோவில் முன்பு திரண்டனர். இதனால் குற்றாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.