நெல்லை பாளையங் கால்வாயை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளடங்கிய மனுவை பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ அப்துல் வஹாப்பிடம் மமக,தமுமுக வினர் அளித்தனர்.சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்ற பாளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நெல்லை மத்திய மாவட்ட திமுக மாவட்ட செயலாருமான மு.அப்துல் வஹாப் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் மற்றும் மாவட்ட பகுதி நிர்வாகிகளிடம்தாம் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு உழைத்த மமக மற்றும் தமுமுகவினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது மாவட்ட தலைவர் K.S. ரசூல் மைதீன் மற்றும் பகுதி தலைவர் தேயிலை மைதீன் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது,மேலப்பாளையம் வழியாக செல்லும் பாளையங் கால்வாயை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், மேலப்பாளையம் அரசு மருத்துவ மனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட வேன்டும்.அனைத்து மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட வேன்டும். பிரசவம் சிசேரியன் செய்ய மயக்கவியல் மருத்துவர் நியமிக்க வேண்டும். மேலப்பாளையம் இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு, பிளாட்பாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலப்பாளையம் ஹாமீம் புரம் பகுதி மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க வழி செய்திட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் எம்எல்ஏ உடன் திமுக மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல் உள்ளிட்ட மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். இந்நிகழ்வின் போது மமக மாவட்ட துணை செயலாளர் அ.காஜா, பகுதி தலைவர் தலைவர் தேயிலை மைதின், தமுமுக பகுதி செயலாளர் ஏ.ஆர்.பாதுஷா, மமக பகுதி செயலாளர் மாலிக் சேக், பொருளாளர் அசன் மைதின், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரியாஸ், மருத்துவ சேவை அணி செயலாளர் யூசுப், ஊடக அணி பொருளாளர் செய்யது, ஐபிபி மாவட்ட பொருளாளர் ஞானியார், விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் ஆசிக் பாதுஷா, கத்தார் நிர்வாகி முகம்மது மைதீன், சவூதி நிர்வாகி பத்ருதீன்ஷா நாசர், பகுதி துணை தலைவர் குதா முகம்மது, துணை செயலாளர்கள் அப்துல் அஜிஸ், மதார் சாகிப், அன்சாரி, தொண்டர் அணி ஸ்டிக்கர் காஜா, இளைஞர் அணி புரோஸ் கான், அஜ்மல், ஊடக அணி தாசீன், வார்டு நிர்வாகிகள் ராஹத் செய்யது அலி, கல்ஸ் மைதீன் பிள்ளை, ஹூசைன் பாய், கரிம், ஆட்டோ அசன். ஆம்புலன்ஸ் காஜா ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.