தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியினர் டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுரண்டை பகுதியில் கொரோனா தொற்று காலத்தில்
டாஸ்மாக் மதுக்கடை திறப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக நகர தலைவர் தி.அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. அதில் மாவட்ட ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் K.A.ஐயப்பன், மாவட்ட செயற்குழு ஓவியா சிவனைந்த பெருமாள், நகர பொதுச் செயலாளர் செந்தில்குமார் லிங்கம், ஓபிசி பிரிவு செல்லத்துரை மாரியப்பன், நகர துணைத் தலைவர் குட்டிராஜ், நகர செயலாளர் ராயல் ராமசாமி மாரியப்பன், அமைப்புசாரா பிரிவு தலைவர் கணேசன் கோபால், மாரிச்செல்வம் OBC தலைவர் அய்யனார், முத்து வைரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் டாஸ்மாக் திறப்பதை கண்டித்து கோஷங்களை முழங்கினர். மேலும் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் பூலான்குளத்தில் மதுக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் R.மாறவர்மன் தலைமையில் ஒன்றிய இளைஞரணி தலைவர்த. ஜோதி செல்வம் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் S.வேல்முருகன், முத்துராமர், பாலமுருகன், அருணாச்சலம்,ஹரி ராமநாதன், கமலேஷ்மாரிமுத்துமற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.