தென்காசி மாவட்டம் வீராணம், ஊத்துமலை, நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் ஆய்வு மேற்கொண்டு வீராணத்தில் தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய உபகரணங்கள் வழங்கினார். தென்காசி மாவட்டம் ஊத்துமலை, வீராணம், நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் தென்காசி தொகுதிக்குட்பட்ட வடக்கு காவலாகுறிச்சி, சீவலபுரம், கரையடி உடைப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு தனது சொந்த நிதியில் மின் அச்சுப்பொறி, சுடுநீர் கலன், ஆகியவைகளை வழங்கினார். ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் மற்றும் காம்பவுண்ட் சுவர்கள் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதனை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். பின்னர் ஊத்துமலை ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ அங்கிருந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊத்துமலை ஊராட்சி செயலாளர் கணேசன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா,எஸ்ஆர் பால்துரை, திமுக நிர்வாகிகள் சூடாமணி, தங்கத்துரை, காங்கிரஸ் பிரமுகர்கள் கணபதி, சக்திவேல், முஸ்தபா, சோனியா பேரவை பிரபாகர், தெய்வேந்திரன், இளைஞர் காங்கிரஸ் சுப்பையா, மகளிர் காங்கிரஸ் சேர்மக்கனி, தேவி, சங்கீதா, மதிமுக ஆலங்குளம வடக்கு ஒன்றிய செயலாளர் மருதச்சாமிபாண்டியன், ராமசாமி, கண்ணையா, செல்வேந்திரன், ஊத்துமலை டாக்டர் தமிழ்செல்வன், வீராணம் டாக்டர் பிரபாவதி, சுகாதார ஆய்வாளர் ராம்குமார், ஊத்துமலை கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.