கடையநல்லூரில் கலைஞரின் 98-வது பிறந்தநாள் விழா..

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கழக கொடி ஏற்றப்பட்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம் ஏற்பாட்டில் 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்து கொடியேற்றி பிரியாணி பொட்டலங்களை வழங்கினார். நகர செயலாளர் சேகனா வரவேற்றார். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சுந்தரமகாலிங்கம் முன்னிலை வகித்தார். முன்னாள் நகர செயலாளர் முகம்மது அலி, நகர நிர்வாகிகள் சங்கர், முகைதீன்பிச்சை, மாவடிக்கால் நெடுமாறன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வவேந்திரன் தினேஷ், முருகையா, கணேசன், காசி, உவைஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடையநல்லூர் ஒன்றிய பகுதிகளான இடைகால், வேலாயுதபுரம், நயினாரகரம், பொய்கை, கள்ளம்புளி, கோவிலாண்டனூர், கம்பனேரி, வலசை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் கொடியேற்றி இனிப்பு மற்றும் கபசுரக் குடிநீர் முகக் கவசங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் சி.எம்.குமார், வேலாயுதபுரம் குமார், மகேஷ், சுதாகர், சுரேஷ், குட்டி என்ற சீதாராமன், தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!