கடலாடி கிராமத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா;

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அவரது பிறாந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ரத்த தானம் செய்தும் பல்வேறு வகைகளில் மாநிலம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் சென்னன் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா நடைபெற்றது இவ்விழாவில் கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி ஊராட்சி செயலாளர் முருகையன் கழக நிர்வாகிகள் வெங்கடேசன் துரைப்பாண்டி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் இந்நிகழ்வில் கலைஞர் வாழ்க, கலைஞர் புகழ் வாழ்க, என்ற வீர முழக்கம் இட்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து ஒன்றிய திமுக சார்பில் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!