தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சிகிச்சை ஆலோசனை பிரிவு மையம் மற்றும் கொரோனா தகவல் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் ஆகியோர் 02.06.21 புதன்கிழமை துவக்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்
தெரிவிக்கையில்,
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தகவல் மையம் (HELP TESK) மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கு ஆலோசனை பிரிவினை (POST COVID OP) தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உரிய சிகிச்சைகள் வழங்கப்படும். பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற் கொள்பவர்களிடம் அவர்களது உறவினர்கள் உடல்நிலை பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக கொரோனா தகவல் மையம் 6374711850, 6374711851 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு நோயாளிகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.நெடுமாறன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லீன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சாரா பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









