தென்காசி பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA ) எதிர்த்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி அரசின் குடியுரிமை திருத்த சட்ட அரசியலை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற தேசம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தென்காசி நகர எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் கொடிமரம், மவுண்ட்ரோடு, நடுப்பேட்டை, தவளபுரம், நிஹ்மத் நகர் ஆகிய பகுதிகளில் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நகர தலைவர் செய்யது மஹ்மூத் தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் பாதுஷா, நகர இணைச் செயலாளர் பீர் முஹம்மது, நகர பொருளாளர் அப்துல் அமீர், நகர செயற்குழு உறுப்பினர்கள் ஜாபர் அலி, பாதுஷா, கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் ஜிந்தா மதார் , மாவட்ட செயலாளர் சினா, சேனா சர்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திவான் ஒலி, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.