இணைய வழியில் நடைபெற்ற உலக அன்னையர் தினவிழா; தாய்மையை போற்றி கவிஞர் பேரா புகழாரம்..

புதுச்சேரி கவிதை வானில் கவிமன்றம், கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை,தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி மற்றும் இந்தியா பிரைடு புக் ஆஃப் ரிகார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் சார்பாக “அன்னை என்றால் அன்பு “என்ற தலைப்பில் இணையவழியில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கவிஞர் பேரா ” பூக்கும் தாய்மையே உலகம் காக்கும் “என தாய்மையை போற்றி புகழாரம் சூட்டி பேசினார்.மே 28-முதல் 30-வரை 50மணி நேரம் தொடர்ந்து நடந்த இந்த உலக சாதனை பல்சுவை நிகழ்ச்சியின் நிறைவு விழா (30.05.2021) மாலையில் இணைய வழியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவரும்,தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளருமான கவிஞர் பேரா தலைமை தாங்கினார். அவர் “தனது தலைமை உரையில் “உலக அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு உலக சாதனை நிகழ்ச்சியாக ஏறக்குறைய 250- பங்கேற்பாளர்களின் பல்சுவை நிகழ்ச்சி சிறப்பாக நடத்திருப்பது பாராட்டுக்குரியதே. அம்மா என்றால் அன்பு,அன்னை ஓர் ஆலயம் என்றெல்லாம் கொண்டாடப்படும் தாய்மை உள்ளவரை இப்பூவுலகம் உயிர்ப்போடு இருக்கும்.பூக்கும் தாய்மையே உலகைக் காக்கும் “எனப் பேசி தாய்மைக்கு புகழாரம் சூட்டினார். கவிஞர் கிருஜா வரவேற்புரை வழங்கினார். புதுச்சேரி கவிதை வானில் கவிமன்றத் தலைவர் கலாவிசு,கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆ.முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலையுரை வழங்கினர். வொல்டு ரெகார்டு சேர்மன் முனைவர் ஆர்.ராஜேந்திரன் மின்சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் சிவசக்தி இராஐம்மாள்,சிங்கப்பூர் ஷர்மிளா நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் இராஜலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க,சே.ஜோஸ்லின் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் இணையவழியில் உலகெங்கிலுமிருந்தும் பல தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!