தென்காசி ஆட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்..

தென்காசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் முழு உரடங்கில் வருவாய்த்துறை, அரசுத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்கள் மேற்கொண்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சவுந்தர்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் யோகானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரடங்கின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் விளக்கினார். கூட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!