சுரண்டை பகுதியில் கொரோனா தடுப்பு பணி; அதிகாரிகள் அதிரடி ஆய்வு..

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கொரோனா தடுப்பு குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி நேற்று முதல் அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இக் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து சுரண்டை பேரூராட்சி மன்ற பகுதிகளில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கணக்கு மற்றும் தணிக்கை பிரிவு சங்கரநாராயணன் தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சுரண்டை பஸ் ஸ்டாண்ட், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவற்றில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா? தனிமனித இடைவெளி பின்பற்றுதல்?  முககவசம் அணிதல்? கிருமிநாசினி பயன்படுத்துதல்? ஏசி பயன்படுத்தபடுகிறதா? பேருந்துகளில் அரசு விதிமுறை பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வணிக நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்கினர். ஆய்வின் போது வீகேபுதூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி, பேரூராட்சி மன்ற நிர்வாக அதிகாரி வெங்கடேஷ், ஆர்ஐ மாரியப்பன், பேரூராட்சி அலுவலக உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!