கடையநல்லூர் எம்எல்ஏ கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் பெயரில் Kam Muhammed Abubacker என்ற புதிய பேஸ்புக் ஐடி மூலம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையில்
புகார் அளிக்கப்பட்டுள்ளது.கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ பெயரில் பேஸ்புக் ஐடி பதிவு செய்து அதில் இணைந்தவர்களிடம் மெசேஞ்சர் வாயிலாக பணம் கேட்டு உள்ளனர். இது போலியானது என்று தெரிவத்துள்ள முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ இது குறித்து சென்னையில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார். ஆகவே யாரும் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டாம் எனவும் இது போல எந்த போலியான தகவல் வந்தாலும் உரியவரிடம் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.