தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து முகவர்களுக்கும் எதிர்வரும் 28.04.2021 அன்று கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து முகவர்களும் தவறாது மேற்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 22.04.2021 வியாழக்கிழமை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. அதில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வருகின்ற 02.05.2021-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மேற்கோள்ளப்பட்டது.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களும் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க போதுமான பரப்பளவைக் கொண்டுள்ளதால் ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் பின்பற்றியது போல 14 மேஜைகளை கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தென்காசி மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கைக்கு தங்களால் நியமனம் செய்யப்படும் முகவர்கள் பட்டியலினை 23.04.2021 க்குள் ஒப்படைக்க வேண்டுமெனவும், மேலும் கோவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கையாக 10% கூடுதல் முகவர்கள் பட்டியலினை தனியே ஒப்படைக்க வேண்டும்.கோவிட்-19 நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து முகவர்களுக்கும் எதிர்வரும் 28.04.2021 அன்று கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து முகவர்களும் தவறாது மேற்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, தேர்தல் வட்டாட்சியர் திரு.சண்முகம், அரசு அலுவலர்கள், காவல் துறையினர், வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.