சுரண்டையில் கொரோனா விழிப்புணர்வு..

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் சுரண்டையில் கொரானா பரவலை தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தன்னார்வலர்கள் மேற்கொண்டனர்.கொரானா தொற்றின்  இரண்டாவது அலை இந்தியா முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு கொரோனா தொற்று குறித்த போதிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லாததும், அவர்களின் அலட்சியமுமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் கொரானா குறித்து தெரு பிரச்சாரம் மேற்கொண்டனர். முகக்கவசம் அணிவதின் அவசியம், சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமி நாசினியை உபயோகித்து சுகாதாரத்தை பேணுவது ஆகியவை குறித்து பிரச்சாரம் செய்தனர்.சப் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் தலைமையிலான குழுவினர், மாஸ்க் அணியாத பொதுமக்களுக்கு இலவசமாக மாஸ்க் அணிவித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!