தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு
பணங்களோ, பரிசு பொருட்களோ வழங்குவதை தடுக்க சிறப்பு பறக்கும் படை அமைத்து தேர்தல் கமிஷன் கண்காணித்து வருகிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரகேரளம்புதூர் தாலுகா மற்றும் சுரண்டை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் நிலைக்குழு பறக்கும் படை 2 முகைதீன் பிச்சை தலைமையில் எஸ்எஸ்ஐ கமலக்கண்ணன், பால்ராஜ், சதீஷ் குமார், ஸீதர் தலைமையிலான அலுவலர்கள் அடங்கிய குழுவினர் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரகேரளம்புதூர் தாலுகா மற்றும் சுரண்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.