ஜோலார்பேட்டை ஓடும் ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்.ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்நிலைய ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செந்தில்ராஜு தலைமையில்சட்டமன்ற தேர்தலையொட்டி பயணிகள் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செந்தில்ராஜ் தலைமையில் போலீசார்டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரள எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.போலீசார் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த ஒரு பயணியின் பையை சோதனை செய்தபோதுஅதில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாய் ஆகும்..கடத்திய நபர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம்மைநாடு பகுதியை சேர்ந்த சுனில்குமார் (51) என தெரியவந்தது.இவன் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்துள்ளான்.அவனை கைது செய்து வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு௹1 லட்சத்து 60 ஆயிரமாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!