தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க மத்திய அரசு முயற்சி;மக்கள் முன்பு ராகுல்காந்தி பேச்சு..

தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் சுரண்டையில் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு மாவட்ட மற்றும் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமையில் மேளதாளங்கள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் துயர் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் ராகுல் காந்தி நிகழ்ச்சிகள் திறந்த வேனில் இருந்தது. ஆனால் சுரண்டையில் அண்ணா சிலையில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சுமார் ஒரு கிமீ தூரம் ரோட்டின் இரு புறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கையசைத்து வரவேற்பு அளித்ததால் உற்சாகமடைந்த ராகுல்காந்தி திறந்த வாகனத்தை விட்டு இறங்கி முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட எளிய மேடையில் நின்று பேசினார். இதனால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தலைமையில் நடந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் பழனி நாடார் முன்னிலை வகித்தார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது: மாணவர்கள் பசியினால் படிக்காமல் போய்விடக்கூடாது என மதிய உணவு வழங்கிய காமராஜர் வாழ்ந்த புண்ணிய பூமியில் நிற்பது பெருமையாக உள்ளது‌. ஒரேநாடு, ஒரேமொழி என்ற கொள்கையை பா.ஜ., அரசு திணிக்க முயற்சிக்கிறது. மாநில கலாசாரத்தை பிரதமர் அழிக்க முயற்சிக்கிறார் தமிழக அரசை, பிரதமர் மோடி, ரிமோட் மூலம் இயக்கி வருகிறார். இந்த ரிமோட்டில் உள்ள பேட்டரியை கழற்றும் சக்தி தமிழக மக்களிடம் தான் உள்ளது.தமிழக மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டளித்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் வேண்டும். மக்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து சட்டங்களை இயற்றி வரும் மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும் இவ்வாறு ராகுல் பேசினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் பால் என்ற சண்முகவேல் செயலாளர் சேர்மசெல் வம், நாட்டாமை ராமராஜ், செய்தி தொடர்பாளர் சிங்கராஜ், நகர துணைத்தலைவர் முருகன், செயலாளர் சவுந்தர், மாவட்ட இளைஞரணி தலைவர் வள்ளிமுருகன், சுரண்டை இளைஞரணி சுப்பையா, சமுத்திரம்,  துணைச் செயலாளர்கள் ஜெயராஜ் ரவிக்குமார், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் தினகரன், கந்தையா, சாலமோன், ஜெயசந்திரன்,  மாநில பேச்சாளர் பால் துரை உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!