நெல்லையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விமன்ஸ் இந்தியா மூமெண்ட் ஆர்ப்பாட்டம்..

நெல்லை மாவட்டம் களக்காட்டில் கேஸ்,பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து விமன்ஸ் இந்தியா மூமெண்ட் சார்பில் மெகராஜ் பேகம் தலைமையில் எஸ்பிஐ வங்கி எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விமன்ஸ் இந்தியா மூமெண்ட் நெல்லை புறநகர் மாவட்ட பொதுசெயலாளர் நுஸ்ரத் கலந்து கொண்டு பேசினார். அதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களின் அத்தியவசிமான கேஸ், மற்றும், பெட்ரோல், டீசல் விலையை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியுள்ளது மிகவும் வேதனைக்குரியது. மத்தியில் ஆளும் அரசு கார்ப்பரேட் முதலாளிகளை திருப்பதி படுத்துவதற்காக மட்டும் வேலை செய்வதை நம்மால் உணரமுடிகிறது.பொது ஜன மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதே முக்கிய குறிக்கோளாக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் பல பொய்யான வாக்குறுதிகளை மட்டும் மக்கள் மன்றத்தில் வைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்றது. பிஜேபி அரசை கீழே இறக்கும் வரையில் விமன்ஸ் இந்தியா முமெண்ட் இது போன்ற போராட்டங்களை வீரியமாக கொண்டு செல்லும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பீர்பாத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாத்திமா, ஜன்னத் பரிஷனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விமன்ஸ் இந்தியா முமெண்ட் உறுப்பினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இறுதியாக ஷாஜிதா நன்றியுரையாற்றினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!