பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரி நாடார் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ஜெ. ராக்கெட் ராஜாவால் தொகுதியின் வேட்பாளராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.ஆலங்குளம் தொகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக வேட்பாளர் ஹரிநாடார் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆலங்குளம் அருகே வட்டாலூர் கிராமத்தில் மக்களை சந்திக்கும் போது இரண்டு கால்களை விபத்தில் இழந்த தாமரை என்பவர் இரண்டு சக்கர வாகனம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆலங்குளம் தொகுதி கட்சி அலுவலகத்தில் ஆலங்குளம் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்கள் கடந்த வாரம் ஹரி நாடாரிடம் சீறுடைகள் வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று ஆலங்குளம் பேருந்து நிலையம் எதிரே இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு துப்புரவு பணியாளர்கள் 50 பேருக்கு ஹரிநாடார் சீருடைகள் வழங்கினார். மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பைக் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட செயலாளர் ஆனந்த் , மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜோசப், மாவட்ட துனை செயலாளர் செல்வராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கற்குவேல் ஆறுமுகம்,மாநில சமுக வளைதளம் அணி செயலாளர் சேர்மராஜ், கொள்கை பரப்பு செயலாளர் விக்னேஷ் கார்த்திக், மாநில கொள்கை பரப்பு செயலாளர் லாரன்ஸ், சமூக ஆர்வலர் சோனா மகேஷ் மற்றும் ஆலங்குளம் தொகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!