சாமானியர்களும் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும்;குளோபல் லா பவுண்டேசன் கூட்டத்தில் அறிவுறுத்தல்…

நெல்லை மாவட்டம் சார்பில் வள்ளியூரில் குளோபல் லா பவுண்டேசன் அமைப்பின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. குளோபல் லா பவுண்டேசன் இயக்கத்தின் நிறுவனர் சரவண அர்விந்த் பேசுகையில், சாமானிய மக்களும் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் குளோபல் லா பவுண்டேசன் இயக்கத்தின் அறங்காவலர் கலைமணி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் வரவேற்புரையாற்றினார். குளோபல் லா பவுண்டேசன் இயக்கத்தின் நிறுவனர் சரவண அர்விந்த் தலைமை வகித்து பேசினார்.அப்போது இயக்கத்திற்காக அனைவரும் உழைக்க வேண்டும், அடிமட்ட உறுப்பினர்களும் பொறுப்பாளர்களாக வளரவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார். சாமானியர்களும் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும், அரசு அலுவலகங்களில் நடைபெறும் விதிமீறல்களை உடனடியாக இந்த இயக்கம் தட்டி கேட்கும் ஆகையால் அனைவரும் ஒன்றிணைந்து இயக்கம் வளர பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வள்ளியூர் இரயில்வே மேம்பாலம் கட்டும்பணி மிக மந்தமாக நடைபெறுவதால் அது குறித்து விரைவில் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இயக்கத்தின் மாவட்ட செய்தி தொடர்பாளராக ஆனைகுளம் ராஜனை நியமனம் செய்தார்.மேலும் மாவட்ட செயலாளர் அருண், மாவட்ட துணை தலைவர் சவுந்திரராஜன், இளைஞரணி ஆனந்தராஜா, பசுமை நாயகன் சித்திரை, சிவந்த கரங்கள் சிதம்பரக்குமார், நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் ராமச்சந்திரன், ஜோவின், நம்பிராஜன், சண்முகம், ரவிசித்து, மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர் இறுதியில் அமைப்பின் உறுப்பினர் நல்லகண் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!