தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தென்காசி அரசு போக்குவரத்து கழக பணினை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்கிடவும், அனைத்து தொழிலாளா்களையும் பென்சன் திட்டத்தில் இணைத்திட வேண்டியும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலை படி உயர்வினை நிலுவையுடன் உடனடியாக வழங்கிடவும், தகுதியில்லாத சங்கங்களை வைத்த மோசடியான ஒப்பந்தம் மூலம் தொழிலாளா்களை ஏமாற்ற வேண்டாம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு திமுக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் வல்லம் திவான் ஒலி, மத்திய தொழிற்சங்க துணைத் தலைவர் மணிராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த வெள்ளப்பாண்டி, ரவீந்திரன், இக்னேசியல், மணிகண்டன், ராமகிருஷ்ணன், மகேந்திரன், சிவசைலப்பன், செல்லப்பா, கண்ணன், ஜோசப்ராஜ், நடராஜன், சேர்மலிங்கம், சரவணன், சுடலைமுத்து, விக்டர், கென்னடி, ராஜாராம், பொன்னுத்துரை, கருப்பையா, சாமிநாதன், சுகுமாரன், சிவசுப்பிரமணியன் மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்துகழக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.