திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உதயமானது. இதனையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஊர்க்காவல் படையினர் திருநெல்வேலியில் இருந்து தென்காசி மாவட்டத்தின் தலைமையின் கீழ் மாற்றப்பட்டுள்ளனர்.20 பெண் ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 165 ஊர்க்காவல் படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் ஐபிஎஸ் அவர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ஊர்க்காவல் படை என்பது காவல் துறையினருடன் கைகோர்த்து பணி செய்வது மட்டுமின்றி காவல் துறைக்கு பக்கபலமாகவும் இருத்தல் வேண்டும் என்றார். மக்கள் பணிக்காக இணைந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை பாராட்டுகளையும் தெரிவித்து சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.