நெல்லையில் சட்டவிரோத செயல்பாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து மக்களோடு இணைந்து செயலாற்றும் வகையில் வார்டு விழிப்புணர்வு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட மக்கள் பணிக்காக வார்டு விழிப்புணர்வு காவல் அதிகாரிகளின் பணியினை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.நெல்லை மாநகரத்தில் உள்ள 55 வார்டுகளுக்கும் மக்களோடு மக்களாக இணைந்து, அந்தந்த வார்டு பொது மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் சார்ந்த மற்றும் சட்டவிரோத செயல்களை கண்டறிந்து, மக்களுடன் இணைந்து செயல்பட வார்டு விழிப்புணர்வு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் காட்டும் விதமாக தலைக்கவசம் வழங்கி பேரணியை ஜன.26 அன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் மோ.டாமோர் இ.கா.ப கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் காவல் துணை ஆணையாளர் சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் டவுன் உட்கோட்ட காவல் உதவி ஆணையாளர் சதிஷ் குமார், பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையாளர் பொறுப்பு சேகர் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.