கடையநல்லூர் அருகே முப்புடாதி அம்மன் கோவிலில் தேரோட்ட திருவிழா கோலாகலம்…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது முப்புடாதி அம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒன்பதாம் நாள் சிறப்பு நிகழ்வாக தேரோட்டத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பக்தர்கள் வடம் பிடத்து தேர் இழுத்தனர்.கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தை தேரோட்ட திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன . விழாவின் 9ஆம் நாளான நேற்று மதியம் 1.30 மணியளவில் ஓம்சக்தி பராசக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் தென்காசி, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினரும் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தை காண்பதற்க்கு சுற்று வட்டார கிராமபகுதி மக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!