தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த சமையல் கலைஞர் காதர் மைதீன்,இவர் 29.12.2020 செவ்வாய் கிழமை இரவு நடந்த
விபத்தொன்றில் படுகாயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தாடை எலும்பு உடைந்து ஆபத்தான கட்டத்தில் இருந்த காதர் மைதினை சங்கை நகர செயலாளர் இஸ்மாயில் கேட்டுக் கொண்டதின் பெயரில் நெல்லை டவுண் நகர தலைவர் கோல்டன் காஜா, மாவட்ட தொண்டரணி செயலாளர் கம்புகடை சம்சுதீன்சம்சு,நகர மருத்துவ சேவை அணி செயலாளர் பீர் மைதீன் உள்ளிட்டோர் சென்று அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களிடம் ஆறுதல் கூறியதோடு மருத்துவமனை டீன்,மற்றும் மருத்துவர்களிடம் உயர் சிகிச்சையளிக்கவும் கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.