நெல்லையில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது…

நெல்லை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் கலியபெருமாள் மகன் கார்த்திக் மற்றும் நெல்லை டவுன் காவல் பிறை தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் சீனி மாரியப்பன் ஆகியோரை பாளை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மீது நெல்லை மாநகர் மற்றும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களிலும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது. டவுனை சேர்ந்த வியாபாரியிடம் மிரட்டி பணம் பறித்த சம்பவத்திலும் இவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்,இவர்கள் நெல்லையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநரம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதம் அலி குற்றவாளிகளை கண்டுபிடிக்க பல்வேறு யுக்திகளை கடைபிடித்து நீண்ட நாளாக டிமிக்கி கொடுத்து வந்த கொள்ளையர்களை பிடித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!