சுரண்டை சுற்றுவட்டார பகுதி தேவாலயங்களில் கலை நிகழ்ச்சிகளோடு கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்..

தென்காசி மாவட்டம் சுரண்டை சுற்றுவட்டார பகுதி தேவாலயங்களில் கலை நிகழ்ச்சிகளோடு கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பது.தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலம் புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு சேகர குரு ரெவ ஸ்டீபன் தலைமை வகித்து ஆராதனை நடத்தினார்.

சபை ஊழியர் ஜாண், சேகர மூப்பர்கள் பாலச்சந்திரன்,  அன்னப்பிரகாசம், ஜேக்கப், ராஜகுமார்,  ஸ்டீபன் ஜெபராஜா.  உள்ளிட்ட சபை மக்கள் கலந்து கொண்டனர்.சுரண்டை  சீயோன் ஆலயத்தில் சேகர குரு ஆல்வின் பிரைட் தலைமையில் ஆராதனை நடந்தது.. பாளை மறை மாவட்டம் சுரண்டை பங்கு சுரண்டை தூய அந்தோணியார் ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் அருட்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது அதில் திரளான சபை மக்கள் கலந்து கொண்டனர்.சுரண்டை ஏஜி சபையில் நடந்த ஆராதனையில் தலைமை போதகர் அருள்ராஜ், பாஸ்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட சபை மக்கள் கலந்து கொண்டனர். சாம்பவர்வடகரை, கீழச்சுரண்டை, பங்களாச்சுரண்டை, வீரகேரளம்புதூர், சேர்ந்தமரம், பரங்குன்றாபுரம், துவரங்காடு, ஊத்துமலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!