சுரண்டையில் பெண் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது..

சுரண்டையில் பெண் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளத்தை சேர்ந்தவர் பக்தவத்சலம் மகன் சக்திதரன் (42) இவர் நேற்று மாலையில் சுரண்டை காவல் நிலையம் முன்பு நின்று கொண்டு அங்கு வருவோர் போவோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் அவரை கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதனை கேட்காமல் பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து அவரிடமும் தகராறு செய்துள்ளார். இது குறித்து பெண் காவலர் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திதரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!