உலகெங்கும் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டும். கீத் ஆராதனை, மரவிழா, கிறிஸ்துமஸ் பரிசுகள், கேரல் ரவுண்ட், கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் குடில், வீடுகள், தேவாலயங்களை அலங்கரித்தல், சாண்டா கிளாஸ் வேடமணிந்து வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்குதல் என கொண்டாட்டங்கள் நடைபெறும்.அதே போன்று தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டி சிஎஸ்ஐ தூய யாக்கோபு ஆலயத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் புதுச்சுரண்டை சேகர தலைவர் அருள்திரு டிகே ஸ்டிபன் தலைமையில் நடந்தது.சபை ஊழியர்கள் பால் செல்லத்துரை தேவராஜன், ஜான், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சசிகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் பாடல்கள், மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. சாண்டா கிளாஸ் வேடமணிந்த நபர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கி சிறுவர்களை மகிழ்வித்தார். நிகழ்ச்சியில் அன்னப்பிரகாசம், ஜோசுவா, கிருபாகரன், சாலமோன், சாம், ஸ்டீபன் ஜெபராஜா, தனபால் ராஜசேகர், ஜேம்ஸ் அழகுராஜா, ராஜகுமார் வேதக்கண்ணு, செல்லையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாலச்சந்திரன் தலைமையில் செய்திருந்தனர்.


You must be logged in to post a comment.