தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு பணி, தனியார் வேலைவாய்ப்பு, உதவித்தொகையை உயர்த்தி வழங்கல், இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நல சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு மாதா மாதம் ரூபாய் 3000 உதவித் தொகை வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 5000 வழங்கிட வேண்டும். தனியார் துறையிலும் 5% வேலைவாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க சட்டம் இயற்றிட வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் 100 நாள் வேலைத் திட்டத்தில் இணைத்திட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அரசு காலிப் பணியிடங்களில் பின்னடைவு உட்பட 5 % ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி விவசாயத் தொழிளாளர் சங்க தாலுகா துணை தலைவர் பாலு ,பீடிசங்க தாலுகா தலைவர் மாரியப்பன், பூலாங்குளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராகிருஷ்ணன் , ஜார்ஜ் ,சட்டகல்லூரி மாணவர் மனோகரன் ஆகியோர் பேசினர்.


You must be logged in to post a comment.