இந்திய தேர்தல் ஆணையம்,நெல்லை மாவட்ட நிர்வாகம், மற்றும் கிராம உதயம் சார்பாக தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணத்தை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்.V.விஷ்ணு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெருமாள் மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் சிவ.கிருஷ்ணமூர்த்தி சேரன்மகாதேவி சார் ஆட்சியர் திரு.பிரதிக் தயாள், வாக்காளர் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி உதவி ஆட்சியர்(பயிற்சி) அலர்மேல்மங்கை, தேர்தல் தாசில்தார் கந்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் V.சுந்தரேசன் வரவேற்று பேசினார்.பெட் காட் மாவட்டச் செயலாளர் முனைவர்.கோ.கணபதிசுப்பிரமணியன், நல்நூலகர் திரு.முத்துகிருஷ்ணன், வழக்கறிஞர்.Dr.S. புகழேந்தி, பகத்சிங், நாங்குநேரி சபேசன், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.தப்பு செட் நாட்டுப்புற பாடல், விழிப்புணர்வு பாடல் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் கைலாசபுரம் ஜங்ஷன், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், தெற்குபஜார், தியாகராய நகர் போன்ற பல பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது .மாவட்ட நிர்வாகம் மற்றும் கிராம உதயம் சார்பாக வருகின்ற 20/11/2020 வரை மாவட்டம் முழுவதும் ஆட்டோ மற்றும் கலை குழுக்கள் மூலம் நெல்லை மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார கலை பயணம் நடைபெற உள்ளது.


You must be logged in to post a comment.