சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவை திறன் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்…

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவை திறன் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேசிய ஊரக சுகாதார  இயக்கம் (என்எச்எம்) மூலம்  மருத்துவமனைகளின் சேவை திறன் குறித்து, வருகின்ற வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளிடம் கருத்துக்கள் கேட்டு சேவையின் தரத்தை மேம்படுத்த உத்தரவிட்டு அதன் படி குவாலிட்டி தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.அதன் படி தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவை திறன் கருத்து கேட்பு கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா தலைமையில் நடந்தது. டாக்டர்கள் சுபா,  அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள், நோயாளிகள் கருத்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற் பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர்கள் பால சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!