நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா..

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட மாணவ- மாணவிகள் கலந்துக் கொள்ளலாம். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.போட்டிக்கான தலைப்புக்கள் பின்வருமாறு:

1-2 ஆம் வகுப்பு – மலரும் இலையும், 3-4 ஆம் வகுப்பு – இயற்கைக் காட்சி, 5-6 ஆம் வகுப்பு – மழை நீர் சேகரிப்பு, 7-8 ஆம் வகுப்பு-கொரானா விழிப்புணர்வு ஓவியம், மாணவர்கள் A4 அளவு வரைப்பட தாளில் வரைந்து, தங்கள் படைப்புக்களை 17.11.2020 மாலை 5 மணிக்கு முன்பாக நெல்லை அருங்காட்சியகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம்.

வரைபட தாளின் பின்புறம் தங்களின் பெயர், வகுப்பு, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் எழுதி அனுப்பவும்.தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி : காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், எஸ்.பி அலுவலகம் அருகில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் 19/11/2020 அன்று அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும். கலந்து கொள்ளும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தை 9444973246 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி அவர்கள் தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!