நெல்லை தென்காசி மாவட்ட 108 அவசர ஊர்தி பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்;

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (COITU) மாவட்ட அவசர கலந்தாய்வு கூட்டங்கள் வாயிலாக சம்பள உயர்வை அரசாங்கமே நிர்ணயித்து அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நெல்லை தென்காசி மாவட்டங்களில் 108 அவசர ஊர்தி பணியாளர்கள் அவசர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நவ.07 சனிக்கிழமை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (COITU), பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி 1508 சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கலந்தாய்வு செய்து தொழிலாளர்களின் நிர்வாக சீர்கேடுகளில் உள்ள பிரச்சினைகள களைவதற்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் எவ்வகையான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு ஊழியர்களுக்கு 16 சதவீத ஊதிய உயர்வு அளித்த நிர்வாகம் இவ்வாண்டு சொற்ப சதவீதத்தில் 15, 14, 13, 10 இந்த அடிப்படையில் ஊதிய உயர்வு அளித்துள்ளது. இதனை கண்டித்து 25 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என்று சங்கத்தின் மூலமாக கேட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த ஊதிய உயர்வு கிடைக்க திட்ட இயக்குனர் சுகாதார செயலாளர், தொழிலாளர் ஆணையர் அனைவரும் இணைந்து நிர்ணயிக்க வேண்டும் என்றும், GVK EMRI நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் தோழர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். தோழர் இருதய மாதா உறுதி மொழியுடன் கலந்தாய்வு கூட்டம் துவங்கியது. மேலும் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் சரவணன் தீர்மானங்கள் குறித்து விளக்கினார். மேலும் பொறுப்பாளர்கள் பலர் சிறப்புரையாற்றினர். தோழர் வீர குரு, தோழர் வசந்தி ஆகியோரின் நன்றி உரையுடன் கலந்தாய்வு கூட்டம் நிறைவு பெற்றது. மேலும் தோழர் மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்து கலந்தாய்வு கூட்டம் குறித்து விளக்கமளித்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!