தென்காசியில் கொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினர்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு…

தென்காசியில் கொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.தென்காசி மாவட்டம், தென்காசியில் கடந்த 07/09/2020 அன்று பகல் 12:30 மணி அளவில் வீட்டு உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி 800 கிராம் தங்க நகை மற்றும் ரூபாய் 50,000 கொள்ளையடித்து சென்றது.திருட்டு கும்பலை CCTV, mobile tracking போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சம்பவம் நடந்தததிலிருந்து 33 ஆம் நாள் கொள்ளை கும்பலை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.தனிப்படையினரை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் IPS பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.மேலும் அனைத்து வழக்குகளிலும் இதுபோல் திறம்பட செயல்பட்டு தென்காசி மாவட்ட காவல் துறைக்கு நற்பெயர் சேர்க்க வேண்டும் என்று கூறி தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!