தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் அழகிரி பிறந்த தினவிழா; மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்…

தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் விவசாய உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கி அழகிரி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்,விவசாய உபகரணங்கள் வழங்கி தென்காசி மாவட்டம் சுரண்டையில் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். பழனி நாடார், மாவட்ட பொருளாளர் ஊத்துமலை இளைய ஜமீன் முரளிராஜா, ஆகியோர் தலைமையில் சுரண்டை சிவகுருநாதபுரம் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 690 தென்னை மரக்கன்றுகள், 69 விவசாய உபகரணங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டு, 69 மரக்கன்றுகள் நடப்பட்டன.நிகழ்ச்சியில் நகர தலைவர் ஜெயபால், மாநில பேச்சாளர் பால்துரை, மாவட்ட துணைத் தலைவர் பால் (எ) சண்முகவேல்,  தெய்வேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், தாயார்தோப்பு ராமர், சோனியா பேரவை பிரபு, கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர் சமுத்திரம், ஊடக பிரிவு சிங்கராஜ், டயர் செல்வம், கந்தையா, ஆட்டோ செல்வராஜ், ஊடக பிரிவு சிங்கராஜ், கீழச்சுரண்டை ராமகிருஷ்ணன், செல்லத்துரை,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!