சினிமா நடிகர் போல் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு; ஆலங்குளம் காவல் துறையினர் அசத்தல்..

சினிமா நடிகர்கள் போல் வேடம் அணிந்த நபர்கள் மூலம் பொதுமக்களுக்கு வித்தியாசமான முறையில் ஆலங்குளம் காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினரின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே துணைக் காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன் தலைமையில்,காவல் ஆய்வாளர் சந்திரசேகரன்,உதவி ஆய்வாளர் பரத் லிங்கம் ஆகியோர் முன்னிலையில் சினிமா பிரபலங்களான எம்.ஜி.ஆர்,ரஜினிகாந்த்,விஜய்காந்த் ஆகியோர் போன்று வேடம் அணிந்த நாடகக் கலைஞர்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸிடமிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.வேடிக்கையாகவும், வித்தியாசமாகவும், பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலமாகவும்,மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கியும் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.நடிகர்கள் போல் வேடம் அணிந்து அவர்கள் பாணியில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் இருந்ததாக பொதுமக்கள் ஆலங்குளம் காவல் துறையினருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!