சுரண்டை அருகே விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா-தென்காசி எம்எல்ஏ வழங்கினார்..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் தென்காசி எம்எல்ஏ விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். ஊரக புத்தாக்க திட்டம் கோவிட் 19 சிறப்பு நிதி உதவி தொகுப்பிலிருந்து  உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு விவசாய உற்பத்தி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அதிசயபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்தவ சமுதாய நல கூடத்தில் நடந்தது‌.

நிகழ்ச்சிக்கு தென்காசி எம்எல்ஏவும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து 5 உழவர் உற்ப்பத்தியாளர் குழுவை சேர்ந்த  57 விவசாயிகளுக்கு  ரூ 7-50 லட்சம் மதிப்புள்ள வேளாண் உற்பத்தி உபகரணங்களான ஸ்ப்ரேயர் மற்றும் வேளாண் பொருட்களை வழங்கி பேசியதாவது :- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அம்மாவின் அதிமுக அரசு வேளாண் துறைக்கு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது விவசாயியான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை பாதுகாத்து அவர்களின் வருவாயை உயர்த்த பாடுபட்டு வருகிறார்.

விவசாய உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க முதல்வர் செயல்படுகிறார். விவசாயிகளின் நலன் காக்கும் அரசாகவே அதிமுக அரசு செயல்படும் என பேசினார்.. நிகழ்ச்சியில் தமிழக ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ் செல்வன், வட்டார செயல் அலுவலர் அமல் புஷ்பம், வட்டார உதவி இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர், வட்டார அணி தலைவர் பிரகாஷ் அதிமுக மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம்,  ஓன்றிய செயலாளர் இருளப்பன், ராஜகோபாலபேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜான், சுரண்டை நகர செயலாளர் சக்திவேல், கீழச்சுரண்டை ராஜேஷ், எபன் குணசீலன், இருளப்பன், கனகராஜ், வெள்ளைச்சாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!