நெல்லையில் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு மரம் நடுவிழா;ஏழை மாணவிக்கு கல்வி உதவி..

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா மற்றும் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சுப்புராஜ் மில் அருகே இந்திரா நகர் உள்ளது. இப்பகுதியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.வனசுந்தர் அப்துல்கலாமின் புகைபடத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளையும் வழங்கினார். அழகப்பா பல்கலை கழகத்தில் BBA படிக்கும் மாணவி ஒருவருக்கு பெற்றோர் இல்லாத நிலையில் படிப்பு வகைக்காக ரூ 5000 அப்பகுதி மக்கள் மற்றும் அசோசியேசன் சார்பாக வழங்கினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!