மத்திய பாஜக அரசின் புதிய சட்டங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்-சுரண்டையில் பரபரப்பு…

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மத்திய மாநில அரசுகளின் புதிய சட்டங்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய மாநில அரசுகளின் புதிய வேளாண் சட்டம், மின்சார சட்டம், தேசிய கல்விக் கொள்கை, அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், சூழலியல் தாக்க சட்டங்களை வாபஸ் பெற கோரி சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையம் முன்பு வீ.கே.புதூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு தாலுகா தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் வேலு, சரஸ்வதி, மாரிச்செல்வம், சுடலையாண்டி, ராமமூர்த்தி, சுடர்நிலா, பூவையா, லட்சுமணன், முருகானந்தம், ராமர், சுப்பிரமணியன், அழகுதுரை, ராஜ்குமார், சுசீலா, மீனாட்சி, தனலட்சுமி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்று சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி கைது செய்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!