நெல்லையில் அம்மா திட்டமுகாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக (6.09.19) நாளை அம்மா திட்ட முகாம் கீழ்கண்ட பகுதிகளில் ஐந்தாம் கட்டமாக நடைபெறுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின் படி அம்பாசமுத்திரம் வட்டம் ஊர்காடு, சாத்துப்பத்து மற்றும் பாளையங்கோட்டை மேலப்பாட்டம், அவினாப்பேரி ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் முகாம் நடைபெறுகிறது.

நாளை 06.09.19 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த அம்மா திட்ட முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்,  உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி தொடர்பாக மனுக்களை அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!