தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து நெல்லையில் இ-பாஸ் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதில், இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும்போது அதிக அளவில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும், இடைதரகர்களிடம் குறிப்பிட்ட தொகையை அளித்தால் மட்டுமே எளிதில் இ-பாஸ் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இந்நிலையில் இந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி,17/08/20 இன்று முதல் தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்குஎவ்வித தடையுமின்றி E-PASS வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தளர்வின்றி பாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மேலும் இந்த பணிகள் யாவும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் கண்காணிக்கப்படுகிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வருவாய் அதிகாரிகள் செய்து வருகின்றனர். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.