பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி தொகுதி எம்எல்ஏ தலைமையில் புதிய ரேஷன்கடை திறக்கப்பட்டது.தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள குருங்காவனம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ 7 லட்சம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார்.இந்த நிலையில் பணிகள் முடிந்து நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தொகுதி எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கி ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
சுரண்டை நகர அதிமுக செயலாளர் சக்திவேல் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சுரண்டை பேரூராட்சி செயல் அலுவலர் அரசப்பன், ஒன்றிய அதிமுக செயலாளர் அமல்ராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.கே.டி ஜெயபால், அதிமுக நிர்வாகிகள் ரமேஷ், எபன் குணசீலன், ஜவஹர் தங்கம், கீழச்சுரண்டை மாரியப்பன், சங்கர், ஆடிட்டர் முத்துராஜ், இந்திரா அழகுதுரை,தேனம்மாள் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியாகையால் அதிமுகவினர் பெருமளவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.