சுரண்டையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசி மாவட்டம் சுரண்டையில் மட்டும் டாக்டர்கள், போலீஸ்கள், வங்கி மேலாளர்,
ஊழியர்கள், சிறுவர், முதியோர் சுப மற்றும் துக்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டோர் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என 76 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து முற்றிலும் குணமாகி வீட்டிற்கு வந்துள்ளனர் .இருப்பினும் தற்போது காய்ச்சல், சளி, இருமல், இளைப்பு போன்றவற்றிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கூடாது என சுகாதார துறை உத்தரவிட்டுள்ள நிலையில் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இரத்த பரிசோதனையாளரும் ஒருவர் மட்டுமே உள்ளார். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி இல்லை. ஆகவே உடனடியாக கூடுதல் மருத்துவர் நியமிப்பதுடன் கொரோனாவின் ஆரம்ப கட்ட பரிசோதனையினை சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.